இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கேலோ பாரத் நிதித் திட்டம், விளையாட்டுகளில் பெண்களையும் பின் தங்கிய பிரிவினரையும் ஊக்குவிக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 05 DEC 2025 2:23PM by PIB Chennai

நாடு முழுவதும் விளையாட்டு உள்கட்டமைப்பில் சமமான வளர்ச்சியை உறுதி செய்வதும், நாடு முழுவதும் உள்ள எஸ்சி பிரிவினர், பழங்குடியினர், பெண்கள் போன்றவர்களை விளையாட்டுகளில்  ஊக்குவிப்பதும் கேலோ பாரத் நிதி-2025 என்ற திட்டத்தின் நோக்கங்களில் அடங்கும்.

விளையாட்டுகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினரை ஊக்குவித்து தேவைக்கு ஏற்ற விளையாட்டு  கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கான திட்டங்கள் இதில் அடங்கும்.

 கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியைக் குறைப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது. பள்ளி பாடத்திட்டங்களுடன் விளையாட்டுகளை ஒருங்கிணைத்தல், சமூக பங்கேற்பு போன்றவற்றையும் இது வலியுறுத்துகிறது. தற்போது, ​​அஸ்மிதா என்ற பெயரில் பெண்களுக்கான விளையாட்டு முன்முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதன் கீழ் பின்தங்கிய பகுதிகளில் பெண்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகின்றன.

விளையாட்டுத் துறை மாநில பட்டியலில் இருப்பதால், விளையாட்டு வீரர்களின் பங்கேற்புக்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட பொறுப்புகள் முதன்மையாக மாநில அரசுகளிடம் உள்ளது. மத்திய அரசு அந்த முயற்சிகளுக்கு துணைபுரிகிறது.

இந்தத் தகவலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

 

(Release ID: 2199325)

SS/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2203286) வருகையாளர் எண்ணிக்கை : 31
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , हिन्दी