பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பதினைந்தாவது நிதி ஆணையத்தின் கீழ் ரூ 717 கோடி விடுவிப்பு

प्रविष्टि तिथि: 12 DEC 2025 12:17PM by PIB Chennai

மத்திய அரசு பதினைந்தாவது  நிதி ஆணையத்தின் கீழ் மகாராஷ்டிராவில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ 717.17 கோடியை விடுவித்துள்ளது. இந்தத் தொகை 2025-26 நிதியாண்டிற்கான பிரிக்கப்படாத மானியங்களின் முதல் தவணையாகும்.  இந்த நிதி, மாநிலத்தில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் தகுதியுள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. இதில் 2 மாவட்ட பஞ்சாயத்துகள், 15 தொகுதி பஞ்சாயத்துகள், 26,544 கிராம பஞ்சாயத்துகள் ஆகியவை அடங்கும்.

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் மூலம், மத்திய அரசு, மாநிலங்களில் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகள் / பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்கள்  ஆகியவற்றிற்கு பதினைந்தாவது நிதி ஆணையம் மானியங்களை வெளியிட பரிந்துரைக்கிறது. ஒதுக்கப்பட்ட மானியங்கள் ஒரு நிதியாண்டில் 2 தவணைகளாக பரிந்துரைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. அரசியலமைப்பு சட்டத்தின் பதினொன்றாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள இருபத்தி ஒன்பது பாடங்களின் கீழ், சம்பளம் மற்றும் பிற நிறுவன செலவுகளைத் தவிர்த்து, இடம் சார்ந்த களத் தேவைகளுக்கு, இந்த இலவச மானியங்கள் பயன்படுத்தப்படும்.

***

(Release ID 2202797)

SS/PKV /KR


(रिलीज़ आईडी: 2202959) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi