PIB Headquarters
அபாயகரமான துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பை மேம்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டங்கள்
प्रविष्टि तिथि:
11 DEC 2025 3:19PM by PIB Chennai
சுரங்கம், பெட்ரோலியம், உலோகவியல், ரசாயனம், கனரக உற்பத்தி போன்ற தொழில்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தத் தொழில் துறைகளில் உள்ள பல தொழிலாளர்கள் அதிக ஆபத்துள்ள சூழல்களில் பணியாற்றுகிறார்கள். தொழிலாளர்களுக்கு வலுவான, பாதுகாப்பு கட்டமைப்பின் அவசியத்தை உணர்ந்து, அரசு 29 மத்திய தொழிலாளர் சட்டங்களை 4 தொழிலாளர் சட்டத் தொகுப்புகளாக ஒருங்கிணைத்து புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்தியுள்ளது.
இதன் கீழ் அபாயகரமான துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் பலன்கள் சில:
* அனைத்து தொழிலாளர்களுக்கும் இலவச வருடாந்திர சுகாதார பரிசோதனை.
* தொழிலாளர்களுக்கு இஎஸ்ஐ சலுகைகள், வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை, சலுகைகள்
* கட்டாய ஆபத்து மதிப்பீடு செய்யப்படுவதுடன், அவசரகால மீட்பு அமைப்புகள் பராமரிக்கப்பட வேண்டும்.
* கர்ப்பிணிப் பெண்கள் ஆபத்தான செயல்முறைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் அபாயகரமான துறைக்கான பாதுகாப்பை வலுப்படுத்துதல்
புதிய சட்ட கட்டமைப்பு அபாயகரமான துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பாதுகாப்பான பணியிடங்கள், வலுவான பாதுகாப்பு, மிகவும் கண்ணியமான பணிச்சூழல் ஆகியவற்றை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
முன்பு இருந்த சட்டங்களின் படி, அபாயகரமான தொழில் துறையில் பணிபுரியும் தொழிலாளர்களின் பாதுகாப்பு தனித்தனி விதிகளின் கீழ் வந்தன. தற்போது சிறந்த நடைமுறைகளுடன் கூடிய ஒருங்கிணைந்த பாதுகாப்பு விதிமுறைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
புதிய தொழிலாளர் சட்டங்கள் பாதுகாப்பான, பொறுப்புணர்வு மிக்க பணியிடங்களை நோக்கிய மாற்றத்தைக் ஏற்படுத்தும். குறிப்பாக ஆபத்தான துறைகளில் உள்ளவர்களுக்கு அதிக பாதுகாப்பை இந்தச் சட்டங்கள் வழங்கும். வலுவான பாதுகாப்பு தரநிலைகள், உலகளாவிய சமூகப் பாதுகாப்பு, நலத்திட்ட வசதிகள் போன்றவை இதில் உள்ளன. பாதுகாப்பு என்பது ஒரு சலுகை அல்ல, மாறாக அது அவசியம் என்ற நிலையை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தியா அதிக உற்பத்தித்திறன் கொண்ட நாடாக, சிறந்த பொருளாதார நிலையை நோக்கி நகரும் நிலையில், ஒவ்வொரு தொழிலாளர்களின் பங்களிப்பையும் புதிய சட்டங்கள் கௌரவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202249®=3&lang=1
(Release ID: 2202249)
****
AD/PLM/SH
(रिलीज़ आईडी: 2202582)
आगंतुक पटल : 20