சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இணையவழி நீதிமன்றங்களை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் – மத்திய இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால்

இடுகை இடப்பட்ட நாள்: 11 DEC 2025 1:30PM by PIB Chennai

கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக இணையவழி நீதிமன்றங்கள் திட்டத்தின் 3-ம் கட்டத்தை ரூ.7,210 கோடி ஒதுக்கீட்டுடன் மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. கடந்த 2023-24-ம் ஆண்டில் ரூ.768.25 கோடியும் 2024-25-ம் ஆண்டில் ரூ.1,029.11 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பு 2025-26-ம் நிதியாண்டில் ரூ.907.97 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி நீதிமன்றங்கள் திட்டத்தின் 3-ம் கட்டம் இந்திய நீதிமன்றங்களை மின்னணு மயமாக்கியுள்ளது. மின்னணு நடவடிக்கை மூலம் காகிதப்பயன்பாடடில்லா நீதிமன்றத்தை உருவாக்கியுள்ளது.  அனைத்து நீதிமன்றங்கள், சிறைகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் காணொலிக் காட்சி வசதி செய்யப்பட்டுள்ளது.  நாள்தோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகள், 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள், மின் நீதிமன்றங்கள் இணையதளத்தில் 35 லட்சம் குறிப்புகள் என மின்னணு சேவை விரிவாக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றங்கள், வழக்கறிஞர்களுக்கு 14 கோடிக்கும் அதிகமான குறுஞ்செய்திகளை அனுப்பி உள்ளது.

3,240 நீதிமன்றங்கள், 1272 சிறைகள் ஆகியவற்றில் காணொலிக் காட்சி வசதி செய்யப்பட்டுள்ளது. 30.09.2025 வரை 3.81 கோடி வழக்குகள் ஆன்லைன் வாயிலாக விசாரிக்கப்பட்டுள்ளன.   

இத்தகவலை மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் மாநிலங்களவையில் இன்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202162&reg=3&lang=1

***

AD/IR/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2202536) வருகையாளர் எண்ணிக்கை : 43
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी