சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் ரூ.6.2 கோடியை விடுவித்துள்ளது

प्रविष्टि तिथि: 11 DEC 2025 12:31PM by PIB Chennai

தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம், பல்லுயிர் பெருக்கத்திற்காக 5 மாநிலங்களுக்கு ரூ.6.2 கோடியை  11.12.2025 அன்று விடுவித்தது. இது 5 மாநிலங்களில் செம்மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு உதவும், அத்துடன் விவசாயிகள் மற்றும் வனப்பகுதியைச் சார்ந்த சமூகத்தினரின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும். இந்த நிதி மாநில வனத்துறை, மாநில பல்லுயிர் வாரியங்கள் மற்றும் செம்மரங்கள் வளர்ப்போர் ஆகியோருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிதியில்  தெலங்கானா விவசாயிகளுக்கு ரூ.17.8 லட்சமும், ஆந்திரப்பிரதேச விவசாயிகளுக்கு ரூ.1.1 கோடியும் விடுவிக்கப்படும். தமிழ்நாடு வனத்துறைக்கு ரூ.2.98 கோடியும், கர்நாடக வனத்துறைக்கு ரூ.1.05 கோடியும் மகாராஷ்டிரா வனத்துறைக்கு ரூ.69.2 லட்சமும், தெலங்கானா வனத்துறைக்கு ரூ.5.8 லட்சமும் வழங்கப்படும். அத்துடன் சம்பந்தப்பட்ட மாநில பல்லுயிர் வாரியங்களுக்கு ரூ.16 லட்சம் பகிர்ந்தளிக்கப்படும்.

இதுவரை செம்மரங்கள் பாதுகாப்பிற்காக ரூ.101 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த 108 விவசாயிகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 விவசாயிகளும் இதில் பயனடைந்துள்ளனர். பல்லுயிர் பெருக்க பாதுகாப்பிற்காக இதுவரை மொத்தம் ரூ.127 கோடியை தேசிய பல்லுயிர் பெருக்க ஆணையம் விடுவித்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202109&reg=3&lang=1

***

AD/IR/KPG/SH


(रिलीज़ आईडी: 2202517) आगंतुक पटल : 18
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी