PIB Headquarters
இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை வழிநடத்தும் ஜி.சி.சி.க்கள் (உலகளாவிய திறன் மையங்கள்)
प्रविष्टि तिथि:
11 DEC 2025 10:41AM by PIB Chennai
திறமையும் தொழில்நுட்பமும் சந்திக்கும் நிலையில், இந்தியாவில் 1,700-க்கும் அதிகமான உலகளாவிய திறன் மையங்கள் (ஜி.சி.சி.க்கள்) மூலம் நிறுவனத் தீர்வுகளுக்கான புதிய எதிர்காலம் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இவை பெரிய நிறுவனங்களின் முதுகெலும்புகளாக உள்ளன. அடிப்படை ஆதரவுத் தளமாகத் தொடங்கப்பட்ட இவை இப்போது ஒரு புதுமை சக்தியாக, ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டை இயக்கும் மையமாக உருவாகியுள்ளது. உலகளாவிய திறன் மையங்கள் (ஜி.சி.சி.க்கள்) என்பவை தங்கள் தாய் நிறுவனங்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட வெளிநாட்டு அலகுகள் ஆகும். உலகளாவிய நிறுவன கட்டமைப்பின் ஒருங்கிணைந்த பகுதிகளாகச் செயல்படும் இவை, தகவல் தொழில்நுட்பம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் பிற வணிக செயல்பாடுகள் போன்ற துறைகளில் சிறப்பு நிபுணத்துவத்தை வழங்குகின்றன. செலவுத் திறனை எட்டுவதிலும், திறமையான குழுக்களைப் பயன்படுத்துவதிலும், தாய் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சர்வதேச துணை நிறுவனங்களுக்கிடையே ஒத்துழைப்பை வளர்ப்பதிலும் ஜி.சி.சி.க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த ஜி.சி.சி.க்கள் புதுமை மற்றும் மதிப்பு உருவாக்கத்திற்கு உத்திசார் மையங்களாக வேகமாக வளர்ந்துள்ளன. நிதியாண்டு 2019-ல் 40.4 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அவற்றின் ஒருங்கிணைந்த வருவாய், வெறும் ஐந்து ஆண்டுகளில், நிதியாண்டு 2024-ல் 64.6 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது, ஆண்டுதோறும் 9.8% என்ற ஆரோக்கியமான வேகத்தில் இது வளர்ந்து வருகிறது. இந்த ஜி.சி.சி.க்கள் இப்போது நாடு முழுவதும் 19 லட்சத்திற்கும் அதிகமானோரை வேலைக்கு அமர்த்தியுள்ளன. இது இந்தியாவின் தொழில்நுட்பம் மற்றும் வணிகத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கிறது. இந்த மையங்கள் உலக அளவில் தங்கள் தாய் நிறுவனங்களுக்கான புத்தாக்கம், டிஜிட்டல் மாற்றம் மற்றும் உத்திசார்ந்த செயல்பாடுகளை இயக்குகின்றன. முற்போக்கான கொள்கைகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தொடக்கநிலை ஆதரவு மூலம் இந்தச் சூழல் அமைப்பை வளர்ப்பதில் மத்திய அரசு முக்கியப் பங்கு வகித்துள்ளது. உலகளாவிய நிறுவனங்களுக்கு விருப்பமான இடமாக இந்தியாவை நிலைநிறுத்துகிறது.
பெங்களூரு, ஐதராபாத், புனே, சென்னை, மும்பை மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் முக்கிய தொகுப்புகளைக் கொண்டு, உலகளாவிய திறன் மையங்களுக்கு இந்தியா ஒரு முன்னணி மையமாக மாறியுள்ளது. 2.8 மில்லியனுக்கும் அதிகமான நிபுணர்களைப் பணியமர்த்தும் சுமார் 2,400 மையங்கள் மூலம் இந்தத் துறை 2030-ம் ஆண்டுக்குள் 105 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற ஒருங்கிணைந்த வருவாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, .
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2202046®=3&lang=1
***
AD/SMB/KR
(रिलीज़ आईडी: 2202413)
आगंतुक पटल : 13