அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

அறிவியல் திட்டங்கள்: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை விரிவுபடுத்த முயற்சி

प्रविष्टि तिथि: 10 DEC 2025 4:38PM by PIB Chennai

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, திறமையான இளைஞர்களை அறிவியல் ஆராய்ச்சிக்கு ஈர்க்கும் நோக்கில் இன்ஸ்பையர்-மானக் (INSPIRE-MANAK), இன்ஸ்பையர்-ஷி (INSPIRE-SHE) மற்றும் விஞ்ஞான் ஜோதி ஆகிய திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதன் முக்கிய நோக்கம் நாட்டின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு தளத்தை விரிவுபடுத்துவதாகும்.

இன்ஸ்பையர்-மானக் திட்டம் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை இலக்காகக் கொண்டு, புத்தாக்கமான யோசனைகளை ஊக்குவிக்கிறது. தேர்வு செய்யப்படும் 50,000 மாணவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.

இன்ஸ்பையர்-ஷி திட்டத்தின் கீழ், 17-22 வயதுடைய 12,000 திறமையான இளைஞர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.80,000 உதவித்தொகை வழங்கப்பட்டு, ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறது. விஞ்ஞான் ஜோதி திட்டமானது, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில்  பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க உதவுகிறது. இத்திட்டங்களின் வெற்றி, அவற்றின் செயல்பாட்டு குறிகாட்டிகளைக் கொண்டு தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2201545&reg=3&lang=1

செய்தி வெளியீட்டு அடையாள எண்: 2201545

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2201970) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी