உள்துறை அமைச்சகம்
பேரிடர் மேலாண்மை அமைப்புமுறை
प्रविष्टि तिथि:
09 DEC 2025 5:43PM by PIB Chennai
தேசிய பேரிடர் மேலாண்மை கொள்கை என்பது தடுப்பு, தணிப்பு, தயார்நிலை, மறுவாழ்வு, மறுகட்டமைப்பு மற்றும் மீட்பு உள்ளிட்ட பேரிடர் மேலாண்மையின் அனைத்து கூறுகளையும் உள்ளடக்கியது. இந்த நோக்கங்களை அடைவதற்காக, மார்ச் 2025-ல் திருத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 மூலம் மத்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் ஒரு சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
மாநில/ தேசிய பேரிடர் நிவாரண நிதிகள் திட்டத்தின்படி, 2005-ம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் பிரிவு 20-ன் கீழ், மாநில தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட மாநில நிர்வாகக் குழு, நிதியை முறையாகப் பயன்படுத்துவதற்குப் பொறுப்பு வகிக்கிறது. உதவிப் பொருட்கள் மற்றும் விதிமுறைகளின்படி செலவினங்கள் மேற்கொள்ளப்படுவதை மாநில தலைமைக் கணக்காயர் கண்காணிப்பார்.
மக்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் உள்துறை இணையமைச்சர் திரு. நித்யானந்த் ராய் இதைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200971®=3&lang=1
(Release ID: 2200971)
***
AD/BR/SH
(रिलीज़ आईडी: 2201206)
आगंतुक पटल : 17