ஜவுளித்துறை அமைச்சகம்
இந்திய ஜவுளிப் பொருட்களின் உலகளாவிய விளம்பரத்திற்கான மத்திய அரசின் முயற்சிகள்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 3:10PM by PIB Chennai
இந்தியா, துணி மற்றும் ஆடை ஏற்றுமதியில் உலகின் ஆறாவது பெரிய நாடாகும். 2024–25-ல் 37.75 பில்லியன் டாலர் ஏற்றுமதியை பதிவு செய்தது.
இந்தியத் துணிப் பொருட்களின் உலகளாவிய விளம்பரத்திற்காக, ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது நிதி மற்றும் நிதி அல்லாத உதவிகள் மூலம் சிறுகுறு நடுத்தர நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கிறது.
கஸ்தூரி பருத்தி போன்ற தனித்துவமான பிராண்டுகள் மூலம் 'பிராண்ட் இந்தியா' வலுப்படுத்தப்படுகிறது. பிரமரின் மித்ரா பூங்காக்கள் திட்டம், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் ஆகியவை உற்பத்தி மற்றும் போட்டித்திறனை அதிகரிக்கின்றன. மேலும், தொழில்நுட்பத் துணிப் பொருட்களுக்கான தேசிய தொழில்நுட்ப துணிப்பொருள் இயக்கம் மற்றும் கைத்தறிக்கான வடிவமைப்பு வள மையங்கள் ஆகியவை வடிவமைப்பு கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கின்றன.
இந்தத் தகவலை மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திருமதி பபித்ரா மார்கெரிட்டா இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200825®=3&lang=1
***
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2201204)
आगंतुक पटल : 12