ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஜவுளித் துறை ஏற்றுமதியில் அமெரிக்காவின் வரிவிதிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்

प्रविष्टि तिथि: 09 DEC 2025 3:04PM by PIB Chennai

அமெரிக்கா மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு இந்தியாவின் கைவினைப்பொருட்கள் உட்பட ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதியை மத்திய ஜவுளி அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், ஜவுளித் துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் அமெரிக்கா விதிக்கும் ஏற்றுமதி வரிகளின் காரணமாக ஏற்படும் தாக்கம் குறித்தும் அமைச்சகம் கண்காணித்து வருகிறது.

2025 -ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையில், இந்தியாவின் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகளின் ஏற்றுமதி 20,401.95 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது. இது முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ($ 20,728.05 மில்லியன்) ஒப்பிடுகையில் 1.8% குறைந்துள்ளது. ஆனால் உலகளாவில் வரி விதிப்பு உள்ளிட்ட பிற வெளிப்புற சவால்களுக்கு இடையே நாட்டின் ஏற்றுமதி செயல்திறனில் ஒட்டுமொத்த நிலைத்தன்மையை இது எடுத்துக்காட்டுவதாக உள்ளது (ஆதாரம்: விரைவு மதிப்பீடுகள், வர்த்தகத் துறை). 2025 -ம் ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, சீனா, சவுதி அரேபியா, எகிப்து மற்றும் ஜப்பான் போன்ற முக்கிய நாடுகளின் சந்தைகள் உட்பட 100 -க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்தியாவின் ஏற்றுமதி முந்தைய ஆண்டைக் காட்டிலும் நேர்மறையான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

மக்களவையில் இன்று கேள்வி ஒன்றிற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் திரு பபித்ரா மார்கரிட்டா இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:   https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200814&reg=3&lang=1

(Release ID:2200814)

***

AD/SV/SH


(रिलीज़ आईडी: 2201156) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी