ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருள் பயன்பாடு குறித்த சட்டம்

प्रविष्टि तिथि: 09 DEC 2025 3:03PM by PIB Chennai

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம்1987 - ஐ மத்திய அரசு இயற்றியுள்ளது. இது சரக்குகளை சிப்பமாகக் கட்டுவதற்கான பொருளில் எந்த அளவிற்கு சணல் கட்டாயமாக சேர்க்கப்பட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகிறது. 2024-25 - ம் ஆண்டு உணவுதானிய பருவத்திற்கு 100%  உணவு தானியங்களுக்கு சணல் பொருட்கள் மூலம் சிப்பம் கட்டவும்சணல் பைகளில் 20% சர்க்கரையை சிப்பமாக கட்ட வேண்டும் என்பதையும் கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் சட்டம் 1987 - ன் கீழ் உள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில்மத்திய அரசு குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வுசோதனைபறிமுதல் போன்ற பல்வேறு  நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஜூன் 162015 அன்றுசிப்பம் கட்டுவதற்கான சணல் பொருட்கள் (சிப்பம் கட்டுவதற்கான பொருட்களில் கட்டாய பயன்பாடு) சட்டம்1987 - ன் பிரிவு 67 மற்றும் 8 - ன் கீழ் தரவுகள் மற்றும் மாதிரிகளை பெரும் அதிகாரங்கள்நிறுவனங்களின் வளாகங்களை நேரிடையாக ஆய்வு செய்யும் அதிகாரங்கள்தேடுதல் மற்றும் பறிமுதல் செய்யும் அதிகாரங்கள் போன்ற அதிகாரங்களை மத்திய மற்றும் மாநில அதிகாரிகளுக்கு வழங்க ஏதுவாக மத்திய அரசு உத்தரவு  பிறப்பித்துள்ளது.

மக்களவையில் இன்று மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பபித்ரா  மார்கெரிட்டா கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில்இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200812&reg=3&lang=1  

***

SS/SV/SH


(रिलीज़ आईडी: 2201071) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR