பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
15 - வது நிதி ஆணையத்தின் கீழ் , தமிழ்நாட்டில் உள்ள கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 7,523.06 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிப்பு
प्रविष्टि तिथि:
09 DEC 2025 2:55PM by PIB Chennai
2024-25 மற்றும் 2025-26 நிதியாண்டுகளில், மாநிலங்களில் உள்ள தகுதி வாய்ந்த கிராம பஞ்சாயத்து, தொகுதி பஞ்சாயத்து மற்றும் மாவட்ட பஞ்சாயத்து அமைப்புகளுக்கு, பதினைந்தாம் நிதி ஆணையத்தின் மானியத் திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதியை விடுவித்துள்ளது.
15 - வது நிதி ஆணையத்தின் கீழ் வழங்கப்படும் மானியங்கள், மாநிலங்கள் சமர்ப்பிக்கும் மானிய பரிமாற்றச் சான்றிதழ் மற்றும் 15 - வது நிதி ஆணைய கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத் தொகைகளை பயன்படுத்துவதற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல் நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள ஷரத்துக்களின் படி, கிராமப்புற உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் மாநில அரசுகளால் விதிக்கப்படும் அனைத்து கட்டாய தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ததன் அடிப்படையில் விடுவிக்கப்படுகின்றன. இந்த விபரங்கள் 14.07.2021 தேதியிட்ட கடிதத்தின் மூலம் நிதி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 2014-15 - ம் நிதியாண்டு முதல் 2019-20 - ம் நிதியாண்டு வரை, தமிழ்நாட்டிற்கு 15 - வது நிதி ஆணையத்தின் கீழ் 8,777.43 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 7,523.06 கோடி ரூபாய் மானியத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200805®=3&lang=1
***
SS/SV/SH
(रिलीज़ आईडी: 2201068)
आगंतुक पटल : 15