சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டில் 1,80,906 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டு வருகின்றன

प्रविष्टि तिथि: 09 DEC 2025 2:28PM by PIB Chennai

நாட்டில் துணை சுகாதார நிலையங்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களை வலுப்டுத்துவதன் மூலம் 31.10.2025 வரை மொத்தம் 1,80,906 ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அளித்த தகவல்கள் ஆயுஷ்மான் ஆரோக்கிய மைய இணையதளத்தில் இடம் பெற்றுள்ளது.

கருத்தரித்தல் மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள், தொற்று நோய்கள், தொற்று அல்லாத நோய்கள், நோய்த்தடுப்பு பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்பு, பொதுவான மனநல பாதிப்பு தடுப்பு பராமரிப்பு, நரம்பியல் பிரச்சனைகள் (கால்-கை வலிப்பு, டிமென்ஷியா) மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டு பிரச்சனைகள் (புகையிலை, மது, மருந்துகள்), காது, மூக்கு, தொண்டைப் பராமரிப்பு மற்றும் அடிப்படை அவசர சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய 12 ஆரம்ப சுகாதார சேவைகளை ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்கள் படிப்படியாக வழங்குகின்றன. விரிவாக்கப்பட்ட சேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, மருந்துகள் மற்றும் நோயறிதல்களின் அத்தியாவசிய பட்டியல், ஆரம்ப சுகாதார மையம் – ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் 172 மருந்துகள் மற்றும் 63 நோய் கண்டறிதல்களையும் கொண்டுள்ளது. துணை சுகாதார மையம் – ஆயுஷ்மான் ஆரோக்கிய மையங்களில் 106 மருந்துகள் மற்றும் 14 நோய் கண்டறிதல்கள் சேவை கிடைக்கச் செய்யும் வகையில் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் மாநிலங்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200794&reg=3&lang=1    

***

SS/IR/RJ/RK


(रिलीज़ आईडी: 2200979) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi