மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கம்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 1:33PM by PIB Chennai
தேசிய கால்நடை வளர்ப்பு இயக்கத்தின் தொழில்முனைவோர் மேம்பாட்டு அம்சங்களின் கீழ், மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை, தனிநபர்கள், வேளாண் உற்பத்தி அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள், கூட்டுப் பொறுப்புக் குழுக்கள், வேளாண் கூட்டுறவு அமைப்புகள் மற்றும் பிரிவு 8 -ன் கீழ் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு கிராமப்புற கோழி வளர்ப்புப் பண்ணைகள், செம்மறி ஆடு, ஆடு, பன்றி, ஒட்டகம், குதிரை மற்றும் கழுதை வளர்ப்புப் பண்ணைகள் மற்றும் தீவன மதிப்பு கூட்டு அலகுகள் (அதாவது, வைக்கோல், புற்கள், ஒட்டுமொத்த கலப்பு பொருட்கள், தீவனத் தொகுதி, தீவன விதை பதப்படுத்துதல், தரப்படுத்தல் மற்றும் சேமிப்பு அலகுகள்) ஆகியவற்றை நிறுவுவதற்கு 50 லட்சம் ரூபாய் வரை 50% மூலதன மானியத்தை வழங்குகிறது. முழுத் திட்டமும் தொடக்கம் முதல் இறுதி வரை டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.
இதுவரை, 3843 திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன. இதற்கான மொத்த திட்டச் செலவு 2672.65 கோடி ரூபாயாகும். இதில் 1233.69 கோடி ரூபாய் அளவிற்கு மானியம் வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில், 2014 திட்டத்திற்கு முதல் தவணையாக 354.06 கோடி ரூபாயும், இரண்டாவது தவணையாக 706 திட்டங்களுக்கு 119.34 கோடி ரூபாயும் மானியத் தொகையாக விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்துள்ள மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இதைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200773®=3&lang=1
***
SS/SV/RK
(रिलीज़ आईडी: 2200964)
आगंतुक पटल : 13