வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பதிப்புரிமைச் சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிடுகிறது

प्रविष्टि तिथि: 09 DEC 2025 12:12PM by PIB Chennai

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், பதிப்புரிமைச் சட்டம் குறித்த ஆய்வுக்கட்டுரையின் முதல் பகுதியை தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் காரணமாக எழும் சவால்களுக்குத் தீர்வு காண்பதற்கும், தேவை ஏற்படும் நிலையில், சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வது குறித்த பரிந்துரைகளை வழங்குவதற்கும், ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டத்தின் தன்மையை மதிப்பிடுவதற்கும், ஏப்ரல் 28, 2025 அன்று தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை அமைத்த எட்டு உறுப்பினர்கள் கொண்ட குழுவின் பரிந்துரைகளை இந்த ஆய்வுக் கட்டுரை குறிப்பிடுகிறது.

முழுமையான விலக்கு அளிப்பது அல்லது உரை மற்றும் தரவு சேகரிப்பது குறித்த விதிவிலக்குகள், தன்னிச்சையாக உரிமம் வழங்குவது அல்லது நீட்டிக்கப்பட்ட கூட்டு உரிமம் உள்ளிட்ட ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறைகள் குறித்து இந்த ஆய்வுக் கட்டுரை மதிப்பீடு செய்கிறது. இந்த மாதிரிகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய அம்சங்கள் காரணமாக, ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள படி, உள்ளடக்க படைப்பாளர்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பாளர்களின் உரிமைகளுக்கு இடையிலான சமநிலையை பராமரிப்பதை நோக்கமாகக் கொண்ட  புதிய கொள்கையை உருவாக்க இந்த ஆய்வுக்கு கட்டுரை  முன்மொழிகிறது.

கட்டணமில்லா உரிம மாதிரியை நிராகரித்து, படைப்பாற்றலுக்கான உத்வேகம் அளிக்கும் நடவடிக்கைகளை குறை மதிப்பீடு செய்வதற்கு வாய்ப்பளிக்கும் என்றும், மனிதனால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தின் நீண்டகால படைப்பாற்றல் குறைபாடுகளுக்கு இது வழிவகுக்கும் என்றும் இக்குழு தனது பரிந்துரைகளில் தெரிவித்துள்ளது.

இதற்கு ஒரு மாற்றாக, இந்தக் குழு ஒரு கலப்பின மாதிரியை முன்மொழிகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200741&reg=3&lang=1

***

SS/SV/RK


(रिलीज़ आईडी: 2200896) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi