குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலுக்கு மத்திய அரசின் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
09 DEC 2025 10:58AM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள சிறு நிறுவனங்களின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிக்க, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. உத்யம் வலைத்தளம், எம்எஸ்எம்இ சாம்பியன்ஸ் வலைத்தளம் போன்ற முயற்சிகள் மூலம் டிஜிட்டல்மயமாக்கல் ஊக்கப்படுத்தப்படுகிறது.
இந்த அமைச்சகம், நாடு முழுவதும் 20 புதிய தொழில்நுட்ப மையங்கள் மற்றும் 100 விரிவாக்க மையங்களை நிறுவும் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தொழில்நுட்பம், திறன்வாய்ந்த மனித வளம் மற்றும் ஆலோசனைகள் மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் போட்டித்திறனை அதிகரிக்கும். மேலும், ஏற்றுமதி போட்டித்திறனை அதிகரிக்க குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன கள அலுவலகங்களில் 65 ஏற்றுமதி வசதி மையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
இந்தத் தகவலை மக்களவையில் மத்திய இணை அமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே எழுத்துப்பூர்வ பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200698®=3&lang=1
***
SS/VK/RK
(रिलीज़ आईडी: 2200752)
आगंतुक पटल : 17