கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புது தில்லியில் யுனெஸ்கோவின் அரசுகளுக்கிடையேயான குழுவின் 20-வது அமர்வை இந்தியா நடத்துகிறது

प्रविष्टि तिथि: 08 DEC 2025 3:44PM by PIB Chennai

புது தில்லியின் செங்கோட்டையில் அருவ கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் 20-வது அமர்வு தொடங்குகிறது. வெளியுறவு அமைச்சர் திரு எஸ் ஜெய்சங்கர், மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் இந்த வரலாற்று நிகழ்வில் கலந்து கொண்டனர். யுனெஸ்கோவின் தலைமை இயக்குநர்  டாக்டர் கலீத் எல்-எனானி உள்ளிட்ட மூத்த பிரமுகர்கள், யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி தூதர் விஷால் வி. சர்மா ஆகியோரும் இதில்  கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் செய்தியை கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு விவேக் அகர்வால் வாசித்தார். யுனெஸ்கோவின் முயற்சிகளைப் பிரதமரின் செய்தி பாராட்டியதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த உலகளாவிய கூட்டாளர்களுடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக இருப்பதை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மேலும், விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணலாம் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200378&reg=3&lang=1

****

AD/PVK/SH


(रिलीज़ आईडी: 2200649) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu