சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாடு முழுவதும் சிறுபான்மையினர் சுய வேலைவாய்ப்பு மூலம் வருவாய் உருவாக்கத்திற்கான திட்டங்களை தேசிய சிறுபான்மையின மேம்பாட்டு நிதி நிறுவனம் அமல்படுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 08 DEC 2025 3:40PM by PIB Chennai

நாடு முழுவதும் சுய வேலைவாய்ப்பு வருவாய் உருவாக்கத்திற்கான திட்டங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவதற்கு ஏதுவாக பின்தங்கியுள்ள சிறுபான்மையின மக்களுக்கு சிறுபான்மையின மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் மூலம் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் முகமைகள், பஞ்சாப் கிராமிய வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இத்திட்டத்தின் கீழ் 2024-25-ம் நிதியாண்டில் 860.43 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் சிறுபான்மையின கலைஞர்கள் மற்றும் கைவினைஞர்களின் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில் பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் மத்திய சிறுபான்மையினர் விவகாங்கள் துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200372&reg=3&lang=1

****

AD/SV/RJ/SH


(रिलीज़ आईडी: 2200589) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English , हिन्दी