திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தமிழ்நாட்டில் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:46PM by PIB Chennai
நாடு முழுவதும் திறன் மேம்பாட்டு மையங்கள் மற்றும் அதுசார்ந்த துணை நிறுவனங்கள் வாயிலாக விரிவான திறன் மேம்பாட்டு பயிற்சியை அளிப்பதற்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஐந்து ஆண்டுகளில் 153.70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார்.
இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 97,301 பேருக்கும், ஜெஎஸ்எஸ் திட்டத்தின் கீழ் 77,526 பேருக்கும், ஐடிஐ நிறுவனத்தின் கீழ் 1 லட்சத்து 74 ஆயிரத்து 827 பேருக்கும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில், 489 பிரதமரின் திறன் மேம்பாட்டு மையங்களும், 9 ஜெஎஸ்எஸ் மையங்களும், 301 ஐடிஐ நிறுவனங்களும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200384®=3&lang=1
***
SS/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2200561)
आगंतुक पटल : 12