திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் தொழில் பழகுநர்களுக்கு பயிற்சி அளித்து வரும் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை 1765-ஆக உள்ளது
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:50PM by PIB Chennai
தொழில் பழகுநருக்கு பயிற்சி அளிப்பதை ஊக்குவிக்கவும், சிறு நிறுவனங்களின் தொழில் பழகுநரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேசிய தொழில் பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இரண்டாம் கட்டமாக, இந்த திட்டம் 2022-23-ம் ஆண்டு முதல் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு, உத்தரப்பிரதேச மாநிலம் உட்பட நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. தொழில் பழகுநர் சட்டத்தின் கீழ் நிறுவனங்களில் பயிற்சி பெறும் தொழில் பழகுநருக்கு வழங்கப்படும் உதவித்தொகையில் 25 சதவீதத்தை அதிகபட்சமாக மாதந்தோறும் 1,500 ரூபாய் வரை பகுதி உதவித்தொகையாக வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. இந்த உதவித்தொகை தொழில் பழகுநராக பயிற்சி பெற்று வருபவர்களின் வங்கி கணக்கிற்கு நேரடி பணப்பரிமாற்ற திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்படும்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் பழகுநரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதிலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 32,364 நிறுவனங்களில் தொழில் பழகுநர் பயிற்சி பெற்று வருகின்றனர்.
தமிழ்நாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் தொழில் பழகுநர்களுக்கு பயிற்சி அளித்து வரும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1,765-ஆக உள்ளது.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சர் திரு ஜெயந்த் செளத்ரி தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200389®=3&lang=1
***
SS/SV/RJ/SH
(रिलीज़ आईडी: 2200560)
आगंतुक पटल : 9