சுற்றுலா அமைச்சகம்
அடையாளச் சுற்றுலாத் தலங்களின் மேம்பாடு
प्रविष्टि तिथि:
08 DEC 2025 2:47PM by PIB Chennai
சுற்றுலாத் தலங்கள் மேம்பாட்டை, முதன்மையாக சம்பந்தப்பட்ட மாநில அரசு /யூனியன் பிரதேச நிர்வாகம் மேற்கொள்கிறது
மத்திய அரசு, 'மாநிலங்களுக்கு மூலதன முதலீட்டுக்கான சிறப்பு உதவி - உலக அளவில் அடையாளச் சுற்றுலா மையங்களை உருவாக்குதல்' என்பதன் கீழ், 2024-25 நிதியாண்டில் பஞ்சாப் உட்பட 23 மாநிலங்களில் ரூ 3295.76 கோடிக்கு 40 திட்டங்களை அனுமதித்துள்ளது, இது நாட்டில் அடையாளச் சுற்றுலா மையங்களை விரிவாக மேம்படுத்துதல், அவற்றை உலக அளவில் அடையளாப்படுத்துதல், சந்தைப்படுத்துதல் ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டது. சம்பந்தப்பட்ட மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட திட்டங்கள் மற்றும் இது தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட அளவுருக்களின் அடிப்படையில் திட்டங்கள் அடையாளம் காணப்பட்டன. இந்த முன்முயற்சியின் கீழ் உள்ள திட்டங்கள் அந்தந்த மாநில அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன, மேலும் இதற்கான நிதி அந்தந்த மாநில அரசுகளுக்கு செலவுத் துறையால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்..
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200331®=3&lang=1
***
SS/PVK/SH
(रिलीज़ आईडी: 2200548)
आगंतुक पटल : 8