ஜல்சக்தி அமைச்சகம்
கங்கை நதியை புணரமைப்பதற்கான செயல்திட்ட முடிவுகளை மேற்கொள்ள ஏதுவாக ஐஐடி தில்லியில் உள்ள சீர்மிகு மையத்திலிருந்து தரவுகள் பெற ஒப்புதல்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 3:27PM by PIB Chennai
கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய இயக்கத்தின் கீழ் செயல்திட்டங்களை இறுதி செய்வதற்காக தரவுகள் அடிப்படையிலான உதவிகளை வழங்குவதற்கும், அரசின் இதர முகமைகளுடன் இணைந்து செயல்படுவதற்கும், ஐஐடி தில்லியில் உள்ள சீர்மிகு மையத்தின் கீழ் டிஜிட்டல் நடைமுறைகளை மேற்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி நீர் ஆதார வடிவமைப்புகள், நிலத்தடி நீர் குறித்த மதிப்பீடுகள், முக்கிய நீர் ஆதார நிலைகளை கண்டறிவது, சூழல் குறித்த பகுப்பாய்வு, நீர் ஆதாரங்களின் கண்காணிப்பு போன்ற இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களின் வெளிப்படையான மற்றும் செயலாக்கத்திற்கான முடிவுகளை மேற்கொள்வதற்கு இந்த டிஜிட்டல் அடிப்படையிலான தரவுகள் உதவுகின்றன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், கணித பகுப்பாய்வு மற்றும் திட்டமிடலுக்கான கருவிகள் ஆகியவற்றின் பயன்பாடுகளையும் இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது.
பொதுத்துறை – தனியார் கூட்டாண்மை மூலம் கங்கை நதியை தூய்மைப்படுத்துவதற்கான தேசிய திட்டத்தின் கீழ், கலப்பு பணிமுறை அடிப்படையில் கழிவுநீர்களை வெளியேற்றுவதற்கான கட்டமைப்புகளுக்கு நிதியுதவி கிடைப்பதற்கான அணுகுமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய ஜல்சக்தி துறை இணையமைச்சர் திரு ராஜ் பூஷன் சௌத்ரி எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200355®=3&lang=1
***
SS/SV/RJ/RK
(रिलीज़ आईडी: 2200528)
आगंतुक पटल : 8