சுற்றுலா அமைச்சகம்
உள்நாட்டு சுற்றுலா மேம்பாட்டிற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.1,900 கோடி ஒதுக்கீடு- மத்திய அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத்
प्रविष्टि तिथि:
08 DEC 2025 2:43PM by PIB Chennai
சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவது சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் பொறுப்பாகும். எனினும் குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் பரிந்துரைகளின் அடிப்படையில் சுற்றுலா தலத்தின் உட்கட்டமைப்பு மற்றும் அனுபவத்தை மேம்படுத்த, மத்திய சுற்றுலா அமைச்சகம் தமது பல்வேறு திட்டங்களின் மூலம் நிதியுதவி அளிக்கிறது.
அதிகம் அறியப்படாத பகுதிகள், கலாச்சார மற்றும் சூழல் சுற்றுலா பிராந்தியங்கள் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, உள்நாட்டு சுற்றுலா 2.O-ஐ சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 2023 – 24-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோயில் மேம்பாட்டிற்காக, ரூ.30.02 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சவால் அடிப்படையிலான பகுதிகளின் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் ஆன்மீக சுற்றுலாவுக்காக 2024 – 25-ம் ஆண்டில் ரூ.20.01 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு சுற்றுலா மேம்பாட்டிற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.1900 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் மக்களவையில் இன்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200325®=3&lang=1
***
SS/IR/LDN/RK
(रिलीज़ आईडी: 2200486)
आगंतुक पटल : 8