பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி கலாச்சார திருவிழாவில் தெலங்கானா மாநில பழங்குடியின மாணவர்கள் முதலிடம்

प्रविष्टि तिथि: 08 DEC 2025 9:11AM by PIB Chennai

ஆந்திரப்பிரதேச மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வட்டேஸ்வரத்தில் அமைந்துள்ள கே எல் பல்கலைக்கழகத்தில் 6-வது தேசிய ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி கலாச்சார மற்றும் எழுத்தறிவு திருவிழா மற்றும் கலை திருவிழா 2025 டிசம்பர் 5 அன்று நிறைவடைந்தது.

ஆந்திரப்பிரதேச பழங்குடியினர் நல உறைவிட கல்வி நிலைய சங்கத்துடன் இணைந்து மத்திய பழங்குடியினர் நல அமைச்சகத்தின் தேசிய பழங்குடியின மாணவர்கள் சங்கம் இதை வெற்றிகரமாக நடத்தி நிறைவு செய்தது. நிறைவு நாள் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. பதக்கப்பட்டியலில் தெலங்கானா முதலிடம் பெற்றது. அதைத் தொடர்ந்து ஜார்க்கண்ட், ஒடிசா, சட்டீஸ்கர் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்கள் இடம்பெற்றன.

22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மொத்தம் 1558 பழங்குடியின மாணவர்கள் இத்திருவிழாவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் 

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2200180&reg=3&lang=1

***

SS/IR/LDN/RK


(रिलीज़ आईडी: 2200263) आगंतुक पटल : 21
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Telugu