இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கெவாடியாவில் வரலாற்றுச் சிறப்புமிக்க சர்தார்@150 பாதயாத்திரை நிறைவு

प्रविष्टि तिथि: 06 DEC 2025 6:18PM by PIB Chennai

இந்தியாவின் இரும்பு மனிதருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, 2025 நவம்பர் 26 அன்று கரம்சாத்தில் இருந்து தொடங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க சர்தார்@150 ஒற்றுமை யாத்திரை , குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையில் இன்று ஒரு பிரமாண்டமான விழாவில் நிறைவடைந்ததுமத்திய இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு மற்றும் தொழிலாளர், வேலைவாய்ப்பு அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா மற்றும் மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே ஆகியோர் இன்று பாதயாத்திரையில் இணைந்தனர், கருடேஷ்வர் தத் கோயிலிலிருந்து ஒற்றுமை சிலை வரை பங்கேற்பாளர்களுடன் அவர்கள் நடந்து சென்றனர்.

ஒற்றுமை சிலையில் சர்தார்@150 ஒற்றுமை யாத்திரையின்  பிரமாண்டமான நிறைவு விழாவில் தேசிய மற்றும் மாநிலத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் குஜராத் ஆளுநர் திரு ஆச்சார்ய தேவ்விரத், குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர படேல், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், மத்திய பஞ்சாயத்து ராஜ் மற்றும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை  அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா, மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை இணை அமைச்சர் திருமதி ரக்ஷா காட்சே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டவியா தனது வரவேற்பு உரையில், சர்தார்@150 பாதயாத்திரை பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையால் ஈர்க்கப்பட்டது என்றும், அவர் நாடு முழுவதும் தொடர்ச்சியான திட்டங்கள் மூலம் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்தநாளை இரண்டு ஆண்டு கொண்டாடும் வகையில் நிகழ்வைத் தொடங்கி வைத்தார் என்றும் கூறினார். 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' மற்றும் 'தற்சார்பு  இந்தியா' ஆகியவற்றைக் கட்டியெழுப்புவதற்கான உறுதியைப் பிரதிபலிக்கும் மாவட்ட அளவிலான பாதயாத்திரைகளில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றதாகவும், இந்த தேசிய விருப்பத்தை நனவாக்குவதில் இளைஞர்  சக்தி முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் கூறினார்.

இது ஒரு அடையாள தேசிய பாதயாத்திரையாகத் தொடங்கியது. 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள இளைஞர் சக்தி, குடிமக்கள் மற்றும் சமூகங்களால் இயக்கப்படும் ஒரு பரந்த, நாடு தழுவிய இயக்கமாக வளர்ந்தது. நாடு முழுவதும், 1,527 மாவட்ட அளவிலான பாதயாத்திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டன, 450-க்கும் மேற்பட்ட மக்களவைத் தொகுதிகள் மற்றும் 640-க்கும் மேற்பட்ட மாவட்டங்களை உள்ளடக்கி மாவட்ட மற்றும் சட்டமன்ற-தொகுதி மட்டத்தில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை ஒன்றிணைத்தது. இந்த மாவட்டங்களில் இருந்து, 717 மாவட்டங்களைச் சேர்ந்த 3.5 லட்சம் இளைஞர்கள் தேசிய பாதயாத்திரையில் இணைந்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199844&reg=3&lang=1

***

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2199910) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Gujarati