சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு
இடுகை இடப்பட்ட நாள்:
05 DEC 2025 1:52PM by PIB Chennai
அடையாள திருட்டு (பிரிவு 66சி), கணினி வளங்களைப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல் (பிரிவு 66டி), ஆபாசமான அல்லது தீங்கு விளைவிக்கும் டிஜிட்டல் பதிவுகளை வெளியிடுதல் அல்லது அனுப்புதல் (பிரிவு 67, 67ஏ, 67பி) போன்ற குற்றங்களை உள்ளடக்கிய வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படுகின்றன. இதுபோன்ற வழக்குகளைக் கையாளும் போது பொதுமக்களின் பார்வையிலான தாக்கங்களை நீதித்துறை கவனத்தில் கொண்டுள்ளது.
இந்தக் கவலைகளைத் தீர்க்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் தகவல் தொழில்நுட்பச் சட்டம் -2000-ல் பல்வேறு திருத்தங்களை அறிமுகப்படுத்துவதும் ஒன்றாகும்.
நீதித் துறையில் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக ஏராளமான நீதிமன்ற நடவடிக்கைகள் நேரடியாக ஒளிபரப்பப்படுகின்றன. நீதிமன்ற தீர்ப்புகளின் நகல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன.
தேசிய மின்-ஆளுகை திட்டத்தின் ஒரு பகுதியாக, நீதித்துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு 7210 கோடி ரூபாய் செலவில் மின்-நீதிமன்றங்கள் திட்டத்தின் மூன்றாம் கட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நீதித்துறை செயல்பாடுகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் உள்ள முக்கிய சவால்களை நீதித்துறை கவனத்தில் கொண்டுள்ளது. தரவு பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப நிபுணர்களுடன் ஆறு உயர் நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட ஒரு துணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை மத்திய சட்டத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால் இன்று மக்களவையில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199313®=3&lang=1
----
SS/PLM/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2199631)
வருகையாளர் எண்ணிக்கை : 38