குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

9 கூடுதல் தொழில்நுட்ப மையங்கள் நிறுவப்பட்டுள்ளன

प्रविष्टि तिथि: 05 DEC 2025 11:54AM by PIB Chennai

குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை வழங்குவதற்காக, தற்போதுள்ள 18 தொழில்நுட்ப மையங்களுடன் கூடுதலாக, தொழில்நுட்ப மைய அமைப்புகள் திட்டத்தின் கீழ் 9 புதிய தொழில்நுட்ப மையங்கள் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்  கீழ் தொழில்நுட்ப மையங்களை நிறுவுவதற்கும் இயக்குவதற்கும் 2025–26 நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்ப மையங்களும் தற்போதுள்ள 18 தொழில்நுட்ப மையங்களும் 2024-25-ம் ஆண்டில் எம்எஸ்எம்இ தொழில்முனைவோர் மற்றும் ஊழியர்கள் உட்பட 3.28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு  பயிற்சி அளித்துள்ளன.

செயற்கை நுண்ணறிவு , ரோபாட்டிக்ஸ் மற்றும் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ்  போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களில் சிறப்பு திறன் மேம்பாட்டு திட்டங்களை தொழில்நுட்ப மையங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

இந்தத் தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை இணையமைச்சர் செல்வி ஷோபா கரந்த்லாஜே தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199255&reg=3&lang=1

***

SS/PKV/KPG/SH


(रिलीज़ आईडी: 2199625) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Kannada