அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

தடுப்பூசி ஆராய்ச்சியில் ஒத்துழைப்பு - சிஇபிஐ-யுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது உயிரி தொழில்நுட்பத் துறை

प्रविष्टि तिथि: 05 DEC 2025 11:40AM by PIB Chennai

மத்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் பொதுத்துறை நிறுவனமான உயிரி தொழில்நுட்பத் தொழில் ஆராய்ச்சி உதவி கவுன்சில், தடுப்பூசி தொடர்பான தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாடு, புதுமை ஆகியவற்றில் ஒத்துழைப்புக்காக தொற்றுநோய்களுக்கான ஆயத்தப் பணிகளுக்கான புதுமைக் கண்டுபிடிப்புக் கூட்டமைப்பு எனப்படும் சிஇபிஐ-யுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

சிஇபிஐ தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிப்பு தொடர்பான ஆய்வை ஊக்குவிக்கும் அமைப்பாகும்.  பல்வேறு நாடுகளின் அரசுகள், ஐரோப்பிய யூனியன் போன்றவை சிஇபிஐ-யுடன் இணைந்து செயல்படுகின்றன.

தொற்றுநோய்க்கான தடுப்பூசி உருவாக்கத்தில் ஒத்துழைப்புக்காக உயிரி தொழில்நுட்பத் துறை, 2019-ம் ஆண்டு முதலே சிஇபிஐ-உடன் இணைந்து செயல்படுகிறது. அப்போது மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தற்போது புதுப்பிக்கப்பட்ட்டுக் கையெழுத்திடப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199246&reg=3&lang=1

-----

SS/PLM/KPG/KR


(रिलीज़ आईडी: 2199337) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी