பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - ரஷ்யா ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 22வது கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது

प्रविष्टि तिथि: 04 DEC 2025 7:56PM by PIB Chennai

பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் மற்றும் ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. ஆண்ட்ரி பெலூசோவ் ஆகியோர் கூட்டாக இந்தியா - ரஷ்யா ராணுவம் மற்றும் ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான 22வது ஆணையக் கூட்டத்திற்கு  தலைமை தாங்கினர்.

புதுதில்லியில் உள்ள மானெக்ஷா மையத்தில் டிசம்பர் 04 அன்று இந்த கூட்டம் நடைபெற்றது. பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருக்கு இடையேயான 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு முன்னதாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

இந்தியா-ரஷ்யா உறவு ஆழமான நம்பிக்கை, பொதுவான கொள்கைகள் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்திருப்பதை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், சுயசார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையின் கீழ், உள்நாட்டுப் பாதுகாப்புத் தொழில்துறையின் திறனை உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிற்கும் மேம்படுத்த, இந்திய அரசின் உறுதியை எடுத்துரைத்தார்.

 மேலும், முக்கியமான சிறப்புத் தொழில்நுட்பங்களில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளையும் அவர் வலியுறுத்தினார்.

ரஷ்யப் பாதுகாப்புத் துறை அமைச்சர், பரஸ்பர நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்த இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்தவேண்டும் என்று கூறினார். பல ஆண்டுகால நட்பு மற்றும் உத்திசார் ஒத்துழைப்பால் இரு நாடுகளும் பிணைக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

 ரஷ்யப் பாதுகாப்புத் தொழில் நிறுவனங்கள், பாதுகாப்பு உற்பத்தியில் இந்தியா சுயசார்பு அடைவதற்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். மேலும், 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள 23வது கூட்டத்திற்குத் தலைமை தாங்க, அமைச்சர் பெலூசோவ், ராஜ்நாத் சிங்கை ரஷ்யாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தார்.

இறுதியில், இரு அமைச்சர்களும், தற்போதுள்ள மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான திட்டங்களை எடுத்துக்காட்டி, இந்த ஆணையக் கூட்டத்தின் விதிமுறைகளில் கையெழுத்திட்டனர்.

முன்னதாக, இரு நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சர்களும் புதுதில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2199013&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2199184) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी , Marathi