அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உள்நாட்டு அணுசக்தித் திறன் வளர்ச்சி

प्रविष्टि तिथि: 04 DEC 2025 6:20PM by PIB Chennai

இந்தியாவின் தற்போதைய அணு மின் உற்பத்தித் திறன் 8,780 மெகாவாட் ஆகும். ராஜஸ்தான் (RAPS-8) மற்றும் ஹரியானா (GHAVP-1 & 2) ஆகிய இடங்களில் 700 மெகாவாட் திறன் கொண்ட மூன்று உலைகள் கட்டப்பட்டு வருகின்றன.

மேலும், தலா 700 மெகாவாட் திறன் கொண்ட பத்து உலைகள் பல்வேறு ஆரம்பக் கட்டப் பணிகளில் உள்ளன. பாபா அணு ஆராய்ச்சி மையம் , 200 மெகாவாட் மற்றும் 55 மெகாவாட் திறன் கொண்ட சிறிய அணு உலைகள்  மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திக்கு உதவும் உயர் வெப்பநிலை வாயு குளிர்விக்கப்பட்ட உலை ஆகியவற்றின் வடிவமைப்புப் பணிகளைத் தொடங்கியுள்ளது.

இந்தச் சிறிய உலைகள், தொலைதூரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குதல், அதிக ஆற்றல் தேவைப்படும் தொழில்துறைகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதில் முக்கியப் பங்காற்றும் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198947&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2199173) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी