புவி அறிவியல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நாட்டின் கடலோர பகுதிகளின் நீளம்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 5:08PM by PIB Chennai

தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகம் (NSCS) வழங்கிய சமீபத்திய விதிமுறைகளின்படி, இந்திய கடலோரப் பகுதிகளின் நீளமான 7516.6 கி.மீ., தேசிய ஹைட்ரோகிராஃபிக் அலுவலகத்தால் (NHO) இந்திய நில அளவைத் துறையுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட மறு மதிப்பீட்டில் 11098.81 கி.மீ. ஆக உயர்ந்துள்ளது.

இந்திய நில அளவைத் துறை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், திருத்தப்பட்ட கடலோர பகுதிகளின் நீளம் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தின் 2025 ஏப்ரல் 29 தேதியிட்ட சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளின் நீளம் 906.9 கி.மீ-லிருந்து, 1,068.69 கி.மீ. ஆகவும், புதுச்சேரி பகுதிளின் நீளம் 30.60 கி.மீ-லிருந்து 42.65 கி.மீ. ஆகவும் திருத்தப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198800&reg=3&lang=1

(Release ID: 2198800)

****

AD/BR/SH


(रिलीज़ आईडी: 2199172) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu