அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அணுசக்தித் திறனை அதிகரிக்கும் திட்டம்

प्रविष्टि तिथि: 04 DEC 2025 6:22PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான அணுசக்தி திட்டம் 2047-க்குள் 100 ஜிகாவாட் அணு மின் உற்பத்தித் திறனை அடைவதை இலக்காகக் கொண்டுள்ளது.

 இது 2070-க்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடையவும், புதைபடிவ எரிபொருட்களுக்கு மாற்றாக நம்பகமான மின்சாரத்தை வழங்கவும் உதவும். இந்த இலக்கை அடைய, இந்தியா இரண்டு அணுகுமுறைகளைக் கொண்டுள்ளது.

 700 மெகாவாட் உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் போன்ற பெரிய உலைகளை நிறுவுதல் மற்றும் 200 மெகாவாட் பாரத் அணுஉலைகள் போன்ற சிறிய  உலைகளை  மேம்படுத்துதல். இந்தச் சிறிய உலைகள், தொழில்துறைகள் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப் பயன்படும்.

அணுசக்தித் துறை மற்றும் மின்சார அமைச்சகம் இணைந்து இந்த 100 ஜிகாவாட் இலக்கை அடைவதற்கான செயல் திட்டத்தை உருவாக்கியுள்ளன. பாரத்  உலைகளை அமைப்பதற்கான திட்டக் கோரிக்கைகள் தற்போது பெறப்பட்டு வருகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198951&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2199167) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu