அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2047-க்குள் 100 ஜிகாவாட் அணுசக்தி உற்பத்திக்கு இலக்கு

प्रविष्टि तिथि: 04 DEC 2025 6:22PM by PIB Chennai

வளர்ச்சியடைந்த பாரதத்திற்கான அணுசக்தி திட்டம், 2047-க்குள் 100 ஜிகாவாட் அணு மின் உற்பத்தித் திறனை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நம்பகமான, குறைந்த கரியமில வாயு வெளியீட்டைக் கொண்ட ஆற்றலை வழங்குவதை உறுதி செய்கிறது.

இந்த இலக்கை அடைய, 700 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டு அழுத்தப்பட்ட கனநீர் உலைகளும் , அத்துடன் சிறிய மட்டு உலைகளான 200 மெகாவாட் பாரத் உலை போன்றவையும் உருவாக்கப்படுகின்றன. இந்தச் சிறிய உலைகள், ஓய்வு பெறும் மின் நிலையங்களைப் புதுப்பிக்கவும், தொழில்துறை மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கவும் உதவும்.

தற்போதுள்ள 8.78 ஜிகாவாட் திறனை, 2031-32-க்குள் 22 ஜிகாவாட்டாகவும், 2047-க்குள் 54 ஜிகாவாட்டாகவும் உயர்த்த இந்திய தேசிய அணுமின் கழகம் திட்டமிட்டுள்ளது. மேலும், இந்தியாவில் 4,36,700 டன் யுரேனிய இருப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய திட்டங்களின் பாதுகாப்பு அம்சங்களை அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கண்காணிக்கிறது என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198953&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2199162) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी