அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
நறுமணப் பொருட்கள் மற்றும் மலர் சாகுபடி இயக்கம்
இடுகை இடப்பட்ட நாள்:
04 DEC 2025 4:30PM by PIB Chennai
இந்தியாவில் மலர் சாகுபடியையும் நறுமண பொருட்கள் உற்பத்தியையும் மேம்படுத்த இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகமான சிஎஸ்ஐஆர் இரண்டு முதன்மைத் திட்டங்களை செயல்படுத்துகிறது. விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துதல், தொழில்முனைவோரை மேம்படுத்துதல், மலர் வளர்ப்புத் துறையை வலுப்படுத்துதல் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் சிஎஸ்ஐஆர்-ன் மலர் சாகுபடித் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, இந்த திட்டம் இரண்டாம் கட்டத்தில் உள்ளது. மலர் பயிர்களை பயிரிடுவதன் மூலம் 32,44,000 மனித நாட்கள் வேலை உருவாக்கப்படுகிறது. இந்த பணியின் மூலம் 2,208.63 ஹெக்டேர் பரப்பளவில் மலர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இது நாட்டின் 26 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 126 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டம் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடுதலாக, 17 தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டு தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளன.
2017-ம் ஆண்டில் மலர் வளர்ப்பு பணிக்கு முன்னதாக தொடங்கப்பட்ட முதன்மைத் திட்டம் சிஎஸ்ஐஆர்-ன் நறுமணப் பொருட்கள் திட்டம். நறுமணப் பயிர்களின் சாகுபடி, பதப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் மூலம் கிராமப்புற மேம்பாட்டை ஊக்குவிப்பதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மாநிலங்களவையில் கேள்வி ஒன்றுக்கு இன்று (04.12. 2025) எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் திரு ஜிதேந்திரசிங் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.
(For Proof: 2198763)
****
AD/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2199142)
வருகையாளர் எண்ணிக்கை : 36