சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
இலவச சட்ட உதவி வழங்குபவர்கள் பதிவு செய்து கொள்வதற்கான தளம்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 1:45PM by PIB Chennai
நாடு முழுவதும் இலவச சட்ட உதவிச் சேவைகளை வழங்குவதற்கான கட்டமைப்பை உருவாக்கி, இலவச சட்ட சேவை கலாச்சாரத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு, 2017-ம் ஆண்டு நியாய பந்து (புரோ போனோ) எனப்படும் இலவச சட்ட சேவைத் திட்டத்தை அரசு தொடங்கியது. இது சட்ட சேவைகள் சட்டம் -1987-ன் பிரிவு 12-ன் கீழ் இலவச சட்ட உதவியைப் பெற தகுதியுள்ள நபர்களை இலவச சட்ட உதவி வழங்கும் வழக்கறிஞர்களுடன் இணைக்கிறது.
இந்த திட்டமானது, நீதிக்கான முழுமையான அணுகலுக்குப் புதுமையான தீர்வுகளை வடிவமைத்தல் (DISHA) என்ற, மக்களை மையமாகக் கொண்ட திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. நியாய பந்து (புரோ போனோ) திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, உதவிக்காக தங்கள் நேரத்தையும் சேவைகளையும் தானாக முன்வந்து வழங்கும் வழக்கறிஞர்களைப் பதிவு செய்வதாகும்.
2025 நவம்பர் 30 நிலவரப்படி , 9776 வழக்கறிஞர்கள் நியாய பந்து (புரோ போனோ சட்ட சேவைகள்) தளத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்காக, நாட்டில் உள்ள 109 சட்டக் கல்வி நிறுவனங்களில் புரோ போனோ கிளப் என்ற துணைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 23 உயர் நீதிமன்றங்களில் நியாய பந்து குழுக்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்தத் தகவலை மத்திய சட்டத் துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மெக்வால் இன்று (04.12.2025) மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198648®=3&lang=1
----
AD/PLM/KR
(रिलीज़ आईडी: 2198827)
आगंतुक पटल : 5