சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
சாதாரண மக்களுக்கும் தரமான சட்ட சேவைகளை அளிக்க அரசு நடவடிக்கை - மத்திய இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால்
प्रविष्टि तिथि:
04 DEC 2025 1:44PM by PIB Chennai
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட சாதாரண மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விரைவான சட்ட சேவைகள் கிடைப்பதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 1987-ம் ஆண்டு சட்ட சேவைகள் சட்டம் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட விளிம்பு நிலை மக்களுக்கு இலவச மற்றும் தரமான சட்ட சேவைகள் வழங்குவதற்கு வகை செய்கிறது. இதையடுத்து குடிமக்களுக்கு தரமான சட்ட உதவிகள் கிடைக்க தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அவ்வப்போது காணொலிக் காட்சி வாயிலாகவும் நேரடியாகவும் அகில இந்திய அளவிலான சந்திப்புகளையும் பிராந்திய அளவிலான சந்திப்புகளையும் நடத்துகின்றன.
இத்தகவலை மாநிலங்களவையில் இன்று சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் திரு அர்ஜூன் ராம் மெக்வால் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198647®=3&lang=1
----
AD/IR/KPG/KR
(रिलीज़ आईडी: 2198823)
आगंतुक पटल : 3