உள்துறை அமைச்சகம்
துணை இராணுவப் படைகளில் பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய நடவடிக்கை
प्रविष्टि तिथि:
03 DEC 2025 5:21PM by PIB Chennai
மத்திய துணை ராணுவப் படைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதன் மூலம் அவர்களின் பங்கேற்பை மத்திய அரசு ஊக்குவிக்கிறது.
2016 ஜனவரி முதல், மத்திய ரிசர்வ் காவல் படையில் காவலர் நிலையில் 33 சதவீத பதவிகளும், எல்லைப் பாதுகாப்புப் படை, எஸ்.எஸ்.பி, இந்தோ தீபத் எல்லை பாதுகாப்பு படை ஆகியவற்றில் 14 - 15 சதவீத பதவிகளும் மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
பணிச்சூழலை மேம்படுத்த, பெண்களுக்குத் தனி விடுதிகள், ஓய்வறைகள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள், மற்றும் பெண்களை மையமாகக் கொண்ட மருத்துவ ஆதரவு ஆகியவை வழங்கப்படுகின்றன.
பாலியல் துன்புறுத்தல் புகார்களைக் கவனிக்க பெண்கள் உதவி மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பெண்கள் பணியில் இருக்கும்போது பாதுகாப்பை உறுதி செய்ய, அவர்கள் ஒருபோதும் தனியாகப் பணியமர்த்தப்படுவதில்லை.
இந்தத் தகவல்களை மத்திய உள்துறை இணையமைச்சர் ஸ்ரீ நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198256®=3&lang=1
****
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2198499)
आगंतुक पटल : 8