PIB Headquarters
புதிய தொழிலாளர் சட்டங்கள் பீடி மற்றும் சிகரெட் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கிறது
இடுகை இடப்பட்ட நாள்:
03 DEC 2025 1:57PM by PIB Chennai
அண்மையில் அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்கள் நாட்டில் உள்ள பீடி மற்றும் சிகரெட் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புப் பலன்கள் கிடைக்கவும், பணியிடங்களில் பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் வகை செய்கிறது. இது நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கிறது.
ஊதியச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஊதியத் தொகை இத்தகைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி அரசு நிர்ணயிக்கும் ஊதியம் அடிப்படை சம்பளமாக வழங்கப்படும். மேலும், அவர்கள் பணிபுரியும் நேரமும் வரையறை செய்யப்பட்டுள்ளது. இது அதிக நேரம் பணியாற்றுவதிலிருந்து அவர்களுக்கு ஓய்வளிக்க வகை செய்கிறது.
ஒவ்வொரு தொழிலாளிக்கும் பணி நியமனக் கடிதம் வழங்குவதுடன் ஊதியம் தொடர்பான ரசீதும் வழங்கப்பட வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198061®=3&lang=1
****
AD/SV/KPG/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2198454)
வருகையாளர் எண்ணிக்கை : 39