புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தேசிய மாதிரி கணக்கீட்டுத் தரவுகளை பொதுமக்கள் தடையின்றி பயன்படுத்த ஏதுவாக மத்திய புள்ளியியல் அமைச்சகம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 03 DEC 2025 1:29PM by PIB Chennai

தேசிய மாதிரி கணக்கெடுப்பு அமைப்பு நடத்திய அலகு நிலையிலான தரவுகள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் மத்திய புள்ளியியல் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் அதன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. பயனாளர்கள் இந்த இணையதளத்தில் உள்ள பல்வேறு தரவுகளில் பயன்படுத்துவது குறித்த விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளும் வழங்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தரவுகளை இணையதளத்திலிருந்து எளிதில் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான செயலியும் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு நிலையிலான தரவுகளை சேகரிப்பதற்கும் அவற்றில் பகுப்பாய்வு மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்துவதற்கும் இந்தப் புதிய செயலி வகை செய்கிறது.

கணக்கீடு குறித்த அறிக்கைகளை வெளியிடும் நிறுவனங்கள் மற்றும் மாநாட்டிற்காக தரவுகளைப் பயன்படுத்துவோர் அந்த குறித்த புரிதலை மேம்படுத்துவதற்கும் அந்தத் தரவுகள் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பது குறித்தும், அதன் பயன்பாடு குறித்தும் அறிந்து கொள்வதற்கு இது உதவிடும். 

தரவுகள் குறித்த தனிப்பட்ட உரிமை மற்றும் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில், உரிய பாதுகாப்பு அம்சங்களும் இந்த இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198052&reg=3&lang=1

***

AD/SV/KPG/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2198452) வருகையாளர் எண்ணிக்கை : 33
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी