சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஷாஹிப்கஞ்ச் பகுதியில் கங்கையாற்றின் குறுக்கே பாலம் அமைப்பதன் மூலம் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு, போக்குவரத்து இணைப்பு உறுதிசெய்யப்படுகிறது

प्रविष्टि तिथि: 03 DEC 2025 1:14PM by PIB Chennai

ஜார்க்கண்ட் மாநிலம் ஷாஹிப்கஞ்ச் பகுதியில் வசிக்கும் மக்கள் பல தசாப்தங்களாக கங்கையாற்றின் மீது கடந்து சென்று தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் பல கிலோமீட்டர் தூரம் படகில் செல்வதற்கு அதிக செலவு ஏற்படுவதுடன் குறித்த நேரத்தில் தங்களது பணிகளை  செய்யமுடியாத நிலையில் மருத்துவமனைக்கு செல்வதற்கும் வர்த்தகத்திற்கும் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வந்தனர். இந்த நிலையில் ஜார்க்கண்டில் தேசிய நெடுஞ்சாலை எண் 133-பி மற்றும் பீகாரில் தேசிய நெடுஞ்சாலை எண் 131-ஏ நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட உள்ளதன் மூலம் இப்பகுதி வாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.

இந்தப் பாலம் 8 கிலோமீட்டர் தொலைவிற்கு கட்டப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கான செலவு 1,977.66 கோடி ரூபாயாகும். பாலத்தின் கட்டுமானப் பணிகள் 2026-27-ம் ஆண்டில் நிறைவேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198049&reg=3&lang=1  

----

AD/SV/KPG/SH


(रिलीज़ आईडी: 2198397) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Urdu , English