தேசிய மனித உரிமைகள் ஆணையம்
உத்தரப்பிரதேசத்தில் சட்டவிரோத கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 4 தொழிலாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை
प्रविष्टि तिथि:
03 DEC 2025 1:00PM by PIB Chennai
உத்தரப்பிரதேச மாநிலம் கௌதம் புத் நகர் மாவட்டத்தில் ஜாவர் கிராமத்தில் உள்ள நக்லா ஹூகும் சிங் பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த மூன்றடுக்கு குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளிகள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தன்னிச்சையாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
மேலும், 10 தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்த அந்த கட்டடத்தில் ஒருவரைக் காணவில்லை என்றும் அந்த ஊடக செய்தி தெரிவிக்கிறது. மேலும், இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு உரிய அனுமதியின்றி கட்டப்பட்டு வந்ததாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
ஊடகங்களில் வெளியாகி உள்ள செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் உயிரிழந்தோரின் சார்பில் மனித உரிமை மீறல் குறித்த விசாரணை நடத்தப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை இரண்டு வாரத்திற்குள் சமர்ப்பிக்குமாறு அம்மாவட்ட ஆட்சியருக்கு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2198043®=3&lang=1
***
AD/SV/KPG/KR
(रिलीज़ आईडी: 2198192)
आगंतुक पटल : 3