நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டிஜிட்டல் முறையில் இயங்கும் கடன் மதிப்பீட்டை மேம்படுத்துவதற்காக, எம்எஸ்எம்இ-களுக்கான கடன் மதிப்பீட்டு மாதிரியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

प्रविष्टि तिथि: 02 DEC 2025 5:53PM by PIB Chennai

டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க மத்திய அரசால் பல முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் மதிப்பீட்டு மாதிரியை அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. டிஜிட்டல் கட்டண பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, அரசு , இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய தேசிய கட்டணக் கழகம் ஆகியவை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன. இவற்றில், ரூபே டெபிட் அட்டைகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள பீம்-யுபிஐ பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான ஊக்கத் திட்டம் மற்றும் சேவை குறைவாக உள்ள பகுதிகளில் டிஜிட்டல் கட்டண உள்கட்டமைப்பை பயன்படுத்துவதை ஆதரிப்பதற்காக கட்டண உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி ஆகியவை அடங்கும்.

பிரதமரின் சாலையோர வியாபாரிகளின் தற்சார்பு நிதித் (ஸ்வநிதி) திட்டம் இப்போது மார்ச் 31, 2030 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், சாலையோர வியாபாரிகளுக்கு அவர்களின் வணிகத்தை ஆதரிப்பதற்காக வழங்கப்படும் கடன் முறையே 15,000, 25,000 மற்றும் 50,000 என மூன்று தவணைகளாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிற அம்சங்கள், 30,000 கடன் வரம்புடன் கூடிய யுபிஐ-இணைக்கப்பட்ட ரூபே கடன் அட்டை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கேஷ்பேக் சலுகைகள் ஆகியவையாகும்.

 

இந்தத் தகவலை நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197726&reg=3&lang=1

 

***

AD/BR/KR


(रिलीज़ आईडी: 2198091) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी