ஜவுளித்துறை அமைச்சகம்
கைத்தறி நெசவாளர்களுக்கு அரசின் ஆதரவு: மத்திய அமைச்சர் தகவல்
இடுகை இடப்பட்ட நாள்:
02 DEC 2025 2:55PM by PIB Chennai
நாடு முழுவதும் உள்ள கைத்தறி நெசவாளர்கள் மற்றும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஆதரவளிக்க, மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் தேசிய கைத்தறி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூலப்பொருள் வழங்கல் திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டங்கள் மூலம் மூலப்பொருட்கள், மேம்படுத்தப்பட்ட தறிகள், நெசவுக் கொட்டகைகள் மற்றும் உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தை ஆதரவுக்கான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் 356 சிறிய மற்றும் 2 மெகா கைத்தறித் தொகுப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 42,895 முத்ரா கடன்கள் வழங்கப்பட்டு, 5.34 லட்சத்துக்கும் அதிகமான நெசவாளர்கள் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் உற்பத்தியை மேம்படுத்துவதே இத்திட்டங்களின் முக்கிய நோக்கமாகும்.
ஜவுளித் துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்ஹெரிட்டா இன்று (02 டிசம்பர் 2025) மக்களவையில் இத்தகவலைத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197519®=3&lang=1
****
AD/VK/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2197927)
வருகையாளர் எண்ணிக்கை : 47