ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேளாண் துணிகள் ஊக்குவிப்பு

प्रविष्टि तिथि: 02 DEC 2025 2:52PM by PIB Chennai

தாவரங்களில் இருந்து நார் எடுத்து துணிகள் உற்பத்தி செய்யப்படுவதை ஊக்குவிக்க  குறிப்பாக வேளாண் சார்ந்த துணிகளை ஊக்குவிக்கும் நோக்குடன், ஜவுளித் துறை அமைச்சகம் 2020 ஆம் ஆண்டில் தேசியத் தொழில்நுட்ப துணிகள் இயக்கத்தை  தொடங்கியது.

இந்த இயக்கத்தின் கீழ், வேளாண் துணிகள் தொடர்பான 14 ஆய்வுக்குரிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண்மைத் துறையில் புதுமையான மற்றும் நிலையான பயன்பாடுகளை ஊக்குவிக்க, குஜராத்தின் நவசாரியில் வேளாண் துணிகள் விளக்க மையம் ரூ.3.73 கோடி செலவில் 2024 டிசம்பரில்  நிறுவப்பட்டுள்ளது.

இந்த மையம், விவசாயிகளுக்கு நேரடி செயல்விளக்கங்கள், பயிற்சி மற்றும் விழிப்புணர்வு மூலம், உற்பத்தித்திறனை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும் உதவுகிறது. இதுவரை 576 விவசாயிகள் இந்த மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர். இந்த இயக்கம் ஆராய்ச்சி, சந்தை மேம்பாடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

இந்தத் தகவலை மக்களவையில் இன்று (02 டிசம்பர் 2025) ஒரு கேள்விக்குப் பதிலளிக்கையில், ஜவுளித் துறை இணையமைச்சர் திரு. பபித்ரா மார்ஹெரிட்டா எழுத்து மூலமாகத் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197515&reg=3&lang=1

****

AD/VK/SH


(रिलीज़ आईडी: 2197911) आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी