மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
மாநில அரசுகளுக்கு துணைபுரியும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையின் திட்டங்கள்
प्रविष्टि तिथि:
02 DEC 2025 3:37PM by PIB Chennai
நாட்டில் கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையில் மாநில அரசுகளின் முயற்சிகளுக்குத் துணைபுரியும் வகையில், மத்திய கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பாலின் சராசரி கொள்முதல் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது. திரவப் பாலுக்கு ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டுள்ள போதிலும், பால் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்துவதில்லை. உற்பத்திச் செலவு மற்றும் சந்தை நிலவரங்களின் அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்களே விலையை முடிவு செய்கின்றன.
ராஷ்டிரிய கோகுல் இயக்கம், தேசிய பால்வள மேம்பாட்டுத் திட்டம் போன்ற திட்டங்கள் மூலம் பால் உற்பத்தித் திறன் மேம்படுத்தப்படுகிறது. மேலும், கால்நடை உள்கட்டமைப்பு நிதி மற்றும் சுகாதாரத் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் உற்பத்திச் செலவு குறைக்கப்பட்டு, அவர்களின் வருமானம் உயர்த்தப்படுகிறது.
இந்தத் தகவலை மத்திய அமைச்சர் திரு. ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங் இன்று (02 டிசம்பர் 2025) மக்களவையில் எழுத்துபூர்வமாகத் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2197547®=3&lang=1
****
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2197906)
आगंतुक पटल : 17