ஜல்சக்தி அமைச்சகம்
ஒடிசா மயூர்பஞ்ச் மாவட்டத்தில் ஜல் ஜீவன் திட்டத்தில் 70 சதவீத வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு
प्रविष्टि तिथि:
01 DEC 2025 4:29PM by PIB Chennai
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள 3,679 கிராமங்களில், 1,037 கிராமங்கள் 100 சதவீத குழாய் நீர் இணைப்புகளைப் பெற்றுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் திரு. வி. சோமண்ணா தெரிவித்தார்.
மாநிலங்களவையில் இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ள அவர், ஆகஸ்ட் 2019-இல் வெறும் 4 சதவீத வீடுகளுக்கு மட்டுமே குழாய் நீர் இணைப்பு இருந்த நிலையில், தற்போது 3.91 இலட்சம் வீடுகள் உட்பட 70 விழுக்காடு கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் வசதி கிடைக்கிறது. இன்னும் 1.68 லட்சம் கிராமப்புற வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட வேண்டும் என்றார்.
மீதமுள்ள பணிகளை முடிக்க, ஜல் ஜீவன் திட்டம் 2028 வரை கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில், உட்கட்டமைப்பின் தரம் மற்றும் மக்கள் பங்கேற்பு மூலம் திட்டங்களின் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196980®=3&lang=1
***
AD/VK/RK
(रिलीज़ आईडी: 2197551)
आगंतुक पटल : 3