புவி அறிவியல் அமைச்சகம்
டேராடூனில் நடைபெற்ற 'பேரிடர் மேலாண்மை குறித்த உலக உச்சிமாநாட்டில்' இந்தியாவின் வலுப்படுத்தப்பட்ட பேரிடர் தயார்நிலையை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார்
प्रविष्टि तिथि:
30 NOV 2025 6:01PM by PIB Chennai
உத்தராகண்டில் சுர்கண்டா தேவி, முக்தேஷ்வர், லான்ஸ்டவுன் ஆகிய இடங்களில் ஏற்கனவே மூன்று வானிலை ரேடார்கள் நிறுவப்பட்ட நிலையில், ஹரித்வார், பந்த்நகர், அவுலி ஆகிய இடங்களில் மேலும் மூன்று ரேடார்கள் விரைவில் நிறுவப்படும் என்றும், இதனால் இந்தப் பகுதிக்கான நிகழ்நேர முன்னறிவிப்பு திறன் மேலும் வலுவடையும் என்றும் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
"பேரிடர் மேலாண்மை குறித்த உலக உச்சிமாநாட்டில்" உரையாற்றிய அமைச்சர், அதன் அனுபவங்கள், புவியியல் உணர்திறன் மற்றும் இமயமலை சுற்றுச்சூழல் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பேரிடர் மீள்தன்மை குறித்த உலகளாவிய விவாதத்திற்கு உத்தராகண்ட் மிகவும் பொருத்தமான இடம் என்று குறிப்பிட்டார்.
நீண்டகால சுற்றுச்சூழல் மற்றும் உள்கட்டமைப்பு சேதத்தைத் தடுக்க, தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைப்புகள் இணைந்து வெளியிட்ட நில பயன்பாட்டு விதிமுறைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார். ஆற்றுப் படுகைகளிலும் புதிதாக அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளுக்கு அருகிலும் சட்டவிரோத சுரங்கப் பணிகள் மனிதனால் உருவாக்கப்பட்ட ஆபத்தான அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும், அடித்தளங்களை அரிப்பதாகவும், திடீர் வெள்ளப் பாதிப்புகளை அதிகரிப்பதாகவும் அவர் எச்சரித்தார். குறுகிய கால ஆதாயங்கள் பெரும்பாலும் நீண்டகால அழிவுக்கு வழிவகுக்கும் என்பதை சமூகங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்த உச்சிமாநாட்டில் உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, நாடாளுமன்ற உறுப்பினர் திரு நரேஷ் பன்சால், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் திரு அகர்வால், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை செயலாளர் திரு நிதிஷ் குமார் ஜா, கிராஃபிக் எரா பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் கமல் கன்ஷாலா, தலைமை இயக்குநர் திரு துர்கேஷ் பந்த், மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய துணைத் தலைவர் திரு ரோஹிலா, ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196583®=3&lang=1
***
AD/RB/RK
(रिलीज़ आईडी: 2197464)
आगंतुक पटल : 21