ஜல்சக்தி அமைச்சகம்
ஜல் ஜீவன் இயக்கத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் கண்காணிப்பு: மத்திய அமைச்சர் திரு. வி. சோமண்ணா தகவல்
प्रविष्टि तिथि:
01 DEC 2025 4:28PM by PIB Chennai
ஜல் ஜீவன் இயக்கத்தின் வெளிப்படைத்தன்மைக்காக ஐஎம்ஐஎஸ் என்ற ஒருங்கிணைந்த தளம் மூலம் நிதி மற்றும் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.வி.சோமண்ணா தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவைல் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ஜல் ஜீவன் திட்டம், மற்றும் தூய்மை இந்தியா திட்டங்கள் முறையாக கண்காணிக்கப்படுகின்றன என்றார்.
வெளிப்படைத்தன்மைக்காக ஐஎம்ஐஎஸ் ஒருங்கிணைந்த தளம் மூலம் நிதி மற்றும் செயல்பாட்டு முன்னேற்றம் கண்காணிக்கப்படுகிறது. புதிய சொத்துக்களை புவியியல் அடையாளத் தகவலுடன் இணைக்கும் செயல்முறையும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் இத் திட்டத்தை கண்காணிக்க பிரத்யோக செயலியும் நீர் தரத்தை அறிவிக்க WQMIS ஒருங்கிணைந்த தளமும் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
ஜல் ஜீவன் தரவுகள் பிரதமரின் உள்கட்டமைப்பு திட்டங்களோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. தூய்மை இநதியா திட்டத்தில், எஸ்பிஎம் - ஜி டாஷ்போர்டு மூலம் திறந்தநிலை கழிப்பிட நிலை, கழிப்பறை மற்றும் கழிவு மேலாண்மை கண்காணிக்கப்படுகிறது.
தனிநபர் கழிப்பறைகள் மற்றும் திடக் கழிவு மேலாண்மைச் சொத்துக்களை புவியியல் அடையாளம் காண பிரத்யேக மொபைல் செயலிகளும் பயன்பாட்டில் உள்ளன என்றும் கிராமப்புற திட்டங்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் 'சிட்டிசன் கார்னர்' மூலமும் காண முடியும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196977®=3&lang=1
****
AD/VK/SH
(रिलीज़ आईडी: 2197325)
आगंतुक पटल : 3