ஜல்சக்தி அமைச்சகம்
இல்லந்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் பயன்படுத்தப்பட்ட நிதி குறித்த அறிக்கை
प्रविष्टि तिथि:
01 DEC 2025 4:31PM by PIB Chennai
நாடு முழுவதும் கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தூய்மையான குடிநீர் விநியோகத்தை வழங்க ஏதுவாக இல்லந்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு ஏற்படுத்தும் வசதியை மாநில அரசுகளுடன் இணைந்து ஜல் ஜீவன் என்ற இயக்கத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. 2024-25-ம் ஆண்டு இத்திட்டத்தின் கீழ், மாநில அரசுகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள மற்றும் பயன்படுத்தப்பட்டுள்ள நிதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது முதல் இதுவரை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக 3.60 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் 2.08 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திட்டத்தை 2028-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நீட்டிப்பதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இதற்கென 2025-26-ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் மத்திய அரசின் பங்களிப்பாக 2,438.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அந்த ஆண்டில் மட்டும் 731.67 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு மொத்தம் 1,333.23 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் பங்களிப்பாக 3,343.47 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
மாநிலங்களவையில் இன்று (01 டிசம்பர் 2025) கேள்வி ஒன்றுக்கு ஜல் சக்தித்துறை இணையமைச்சர் திரு சோமன்னா எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196988®=3&lang=1
****
AD/SV/KPG/SH
(रिलीज़ आईडी: 2197296)
आगंतुक पटल : 5