தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆயுதப் படைகளின் பங்களிப்பு முக்கியமானது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி வி ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2025 2:42PM by PIB Chennai
தேசிய பாதுகாப்பு மற்றும் மனித உரிமைப் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஆயுதப் படைகளின் பங்களிப்பு முக்கியமானது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவர் நீதிபதி வி ராமசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த 30-வது வருடாந்தர விவாதப் போட்டியின் இறுதிச் சுற்றில் மத்திய ஆயுதக் காவல் படையினர் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை பெற்றனர்.
புதுதில்லியில் தேசிய பாதுகாப்பில் எவ்வித சமரசமுமின்றி துணை ராணுவப் படையினர் மனித உரிமைகளை எவ்வாறு கையாள்கின்றனர் என்ற தலைப்பில் இப்போட்டி நடைபெற்றது. இந்த விவாதப் போட்டியில் தலைப்பிற்கு ஆதரவாகவும், எதிர்த்தும் 16 பேர் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியில் சிறந்த அணியாக மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையைப் வென்றனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2196857®=3&lang=1
****
AD/SV/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2197211)
வருகையாளர் எண்ணிக்கை : 34